உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரை நிறைவுஈ எதிர்பார்ப்பு அதிகரிப்பு
ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் தோ்தல் பரப்புரை நிறைவு பெற்றது. ஆா்.கே.நகா் இடைத் தோ்தலுக்கான பரப்புரைகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., சுயேட்சை வேட்பாளா் டிடிவி தினகரன், பா.ஜனதா, நாம் தமிழா் கட்சி என எல்லா தரப்பினரும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனா். வெளி நபா்கள் யாரும் அங்கிருக்கக் கூடாது என்பதால் விடுதிகள் உள்பட அங்குள்ள இடங்களில் தங்கியிருப்போர் வெளியேறி வருகின்றனர். செய்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 21ம் தேதி மாலை வரை சமூக வளை தளங்கள் உட்பட எந்த விதத்திலும், எந்த கட்சியையும் ஆதரித்தோ, கட்சிகள் மீது குறை கூறியோ விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
See More
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு மிரட்டல்
இந்தியாவில் அதிக மக்கள்தொகையுடைய உத்தரபிரதேச மாநிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விழா கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு வெளிப்படையாக மிரட்டல் கடிதத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பாரிஷெத் அமைப்பின் கீழ் செயல்படுகின்ற ஹிந்து ஜக்ரான் மான்ச் அமைப்பு அலிகா நகரிலுள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. பள்ளிகள் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடக் கூடாது என்றும், கொண்டாடினால் அந்த பள்ளியின் சுய ஆபத்து முயற்சியாக கொண்டாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பாடல்களை பாடி வாழ்த்து தெரிவித்த அருட்தந்தையரும், குரு மாணவர்களும் கைது செய்யப்பட்டது இந்த மாநிலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் பாரதிய னதா கட்சி ஆட்சி நடக்கும் நிலையில், உத்தரபிபரதேசத்திலும் அதே கட்சி ஆண்டு வருவதால், அனைத்து நிகழ்வுகளும் மத சாயம் பூசப்பட்டு, இந்து தீவிரவாதம் வளரும் வகையில் பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வருவதால், இந்தியாவில் மத சகிப்புதன்மை குறைந்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
See More
இந்தோனீஷியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணம் காட்டும் இளைஞர்கள்
பிரிவினைவாத பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில், வேறுபட்ட மத பின்னணிகளை சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் இந்தோனீஷியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தங்களுடைய அர்ப்பணத்தை தெரிவித்துள்ளனர். பௌத்தம், கன்பியூஸியனிசம், இந்து மதம், இஸ்லாம், சீர்திருத்த சபையினர் மற்றும் காபிரிபாடென் உள்பட பல பாரம்பரிய மத நம்பிக்கை குழுக்கள் இந்த இளைஞர் குழுவில் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 14 ஆம் தேதி இந்தோனீஷியாவின் ஆத்ம ஜெய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் ஜகார்த்தா வளாகத்தில், இந்த இளைஞர்கள் தங்களின் அர்ப்பணத்தை உறுதிமொழி எடுத்து கொண்டனர். உரையடல் மூலம் அமைதியின் முகவர்களாக வலம் வருவோம் என்று அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
See More
கருச்சிதைவு ஆண்டு நினைவில் புலம்பும் ஆயர்கள்
கருத்தடை சட்டம் உருவாக்கப்படப்பட்டு 50 ஆண்டு நிறைவை அடையாப்படுத்தும் வகையில் கருச்சிதைவு பற்றிய திருச்சபையின் அரியதொரு அறிவிப்பு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆயர்களிடம் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு கருச்சிதைவும் ஒரு சோகம் என்றும், 2015 ஆம் ஆண்டு மட்டும் 2 லட்சம் கருச்சிதைவுகள் செய்யப்பட்டிருப்பது சோகமானது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர். மனித வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடு பற்றிய புதிய புரிதல் சமூகத்திற்கு அவசியமாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
See More
முதல் பீட்ஸா டெலிவரி 10 நூற்றாண்டில் கத்தோலிக்க ஆயருக்கு என்று தெரியுமா?
பிட்ஸா என்றால் இன்று அனைவரும் உண்பதற்கு விரும்புகின்ற உணவாக மாறிபோய்விட்டது. இது இத்தாலியின் நேபிள்ஸ் நகரத்தில் முதல்முதலாக உருவானது. இதனுடைய வரலாறு பல நூற்றாண்டுகளுக்க பின்னால் செல்கிறது. பல்வேறு கட்டங்களை கடந்து வந்து, இன்று நாம் சாப்பிடும் பிட்ஸாவாக பரிணமித்து வந்துள்ளது என்றால் மிகையாகாது. பீட்ஸா முன்பதிவு செய்யப்பட்டு முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று வரலாற்றை ஆய்ந்து பார்த்ததில், அது 10 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆயர் ஒருவருக்கு பீட்ஸா வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கான உரிய ஆதாரங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
See More
வங்காள மொழி திருவிவிலியம் மொழிபெயர்த்த பெல்ஜியம் இயேசு சபை மொழிபெர்ப்பாளர் மரணம்
வங்காள மொழி திருவிவிலியத்தை மொழிபெயர்த்த பெல்ஜியம் இயேசு சபை மொழிபெர்ப்பாளர் அருட்தந்தை கிறிஸ்டியன் மிக்னோன் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 93. வங்காள மொழியில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்து வழங்கிய இந்த அருட்தந்தை மிக்னான், பிரலமாக “மங்கல்பார்த்தா (நற்செய்தி) விவிலியம்” அறியப்படுபவர் ஆவார். இந்த அருட்தந்தை வங்காள மொழியில் வழங்கிய திருவிவிலியத்தைதான், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும், அற்கு அருகிலுள்ள வங்கதேச நாடும் பயன்படுத்தி வருகின்றன. இந்த அருட்தந்தை மொழிபெயர்த்து வழங்கிய முறையில்தான் திருவழிபாட்டு முறைகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.
See More
உலகிலேயே மிக உயர்ந்த மரியன்னை சிலையை அமைக்கும் மெக்ஸிகோ
தேசிய பாதுகாவலியாக இருக்கும் கௌடாருபே மரியன்னை சிலையை உலகிலேயே மிகவும் பெரிய சிலையாக அமைக்க மெக்ஸிகோவின் வடக்கில் மத்திய பகுதியிலுள்ள ஸாகேட்காஸ் மாநில மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த மிக பெரிய மரியன்னை சிலை அதிக சுற்றுலா பயணியரை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. தற்போது உலகிலேயே மிகுவும் உயர்ந்த்தாக இருக்கின்ற வெனிசுவோலாவில் அமைந்திருக்கும் அமைதி கன்னி மரியாளின் சிலைக்கு சற்று உயர்ந்ததாக திட்டமிடப்பட்டுள்ள இந்த மரியன்னை சிலை 154 அடி உயரமுடையதாக இருக்கும். மெக்ஸிகோவிலுள்ள பிற சிறிய வடிவிலான முக்கிய மத இடங்களை குறிப்பிடும் அம்சங்களும் இங்கு கட்டப்படவுள்ளன.
See More
நன்கொடைகளை மாற்றி செலவிட்டதால், முன்னாள் மருத்துவமனை தலைவருக்கு தண்டனை
நன்கொடை தொகையை மாற்றி செலவிட்டதால், திருத்தந்தையின் குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் தலைவருக்கு தண்டனை தீர்ப்பளித்து வத்திக்கான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தந்தையின் குழந்தைகள் மருத்துவமனைக்கு கிடைத்த நன்கொடை தொகையான 4 லட்சத்து 81 ஆயிரம் டாலரை கர்தினால் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பை புதுப்பிப்பதற்காக செலவிட்ட அந்த மருத்துவமனையின் முன்னாள் தலைவருக்கு விலக்கி வைக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை தொகை மருத்துவமனையின் நன்மைக்கானது என்று வாதிட்டதை தொடர்ந்து, முன்னர் வழங்கப்பட்ட தடையை விட அதிகமான ஓராண்டு சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விவாரித்தது குறிப்பிடத்தக்கது.
See More
ஆப்பிரிக்க கிறிஸ்தவத்தை சேதப்படுத்தும் மேற்குலக அரசியல்வாதிகள்
இஸ்லாமை பற்றி சிந்தித்தே ஆப்பிரிக்க கிறிஸ்தவத்தை மேற்குலக அரசியல்வாதிகள் சேதப்படுத்துவதாக நைஜீரிய ஆயர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேற்குலகில் இறைநம்பிக்கை குறைந்து வருவதால், தன்னுடைய நாட்டில் மக்களிடம் மேற்குலம் ஏற்படுத்தும் செல்வாக்கு குறைந்து வருவதாக நைஜீரியாவிலுள்ள சோகோடோ மறைமாவட்ட ஆயர் மத்தேயு குகாக் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்தவத்தை பறிகொடுத்துவிட்டு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளும், தூதாண்மை அதிகாரிகளும் இஸ்லாமை பற்றி வெளிப்படையாக சிந்திக்க தொடங்கியிருப்பதால் இந்நிலை எற்பட்டுள்ளதாக ஆயர் மத்தேயு குகாக் தெரிவித்திருக்கிறார். இதனால், நைஜீரியாவில் இஸ்லாம் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆனால். கத்தோலிக்கம் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
See More
பூமிக்கு நெருக்கி வரும் வரும் எரிகல் தாக்குமா? தாண்டுமா
பூமிக்கு அருகே 42 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வியாழக்கிழமையன்று எரிகல் ஒன்று கடந்து செல்ல இருப்பதாக சர்வதேச எரிகல் வலையமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வானில் பல்வேறு எரிகற்கள் சுற்றி வருவதும், சிலவேளைகளில் அவை பூமிக்கு அருகே வருவதும் காலம் காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சில பூமியில் விழுந்து சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இதுபோல் ஒரு கல் விழுந்தது. ஆனால், பெரிய சேதமில்லை. இப்போது பூமிக்கு அருகே வரயிருக்கும் எரிகல்லுக்கு 2012 TC4 என்று பெயரிடப்பட்டுள்ளது. 15 முதல் 30 மீட்டர் அளவுள்ள இந்த எரிகல்லால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த எரிகல்லும் பூமியைத் தாக்காது என்பது தெரிய வந்துள்ளது.
See More