உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

மராவி பேராயலத்தை மீட்டெடுக்க உதவி கோரும் காரிதாஸ்
மராவியிலுள்ள புனித மரியன்னை பேராலயத்தை மீட்டெடுப்பதற்கு பிலிப்பீன்ஸின் காரிதாஸ் உதவி கேட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வருகின்ற தீவிரவாத தாக்குதலால் உருவாகி வரும் ஊட்டசத்து குறைபாடு மற்றும் இடம்பெயர்தல் பிரச்சனை ஆகிய அச்சங்களின் மத்தியில் இந்த அழைப்பு வந்துள்ளது. மின்டநோவ் தீவிலுள்ள பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் நகரத்தில் கத்தோலிக்க சமூகத்தின் மைய வழிபாட்டு இடமான மராவி பேராலயத்தை மீட்டெடுப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று காரிதாஸ் பிலிப்பீன்ஸின் செயலதிகாரி அருட்தந்தை எட்வின் கரிகுஸ் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளோடு தொடர்புகள் கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் மௌடே குழு கடந்த மே மாதம் 23 ஆம் தேதி தீவிரவாத தாக்குதலை தொடங்கியது. பிலிப்பீன்ஸ் அரசு படையின் தீவிர பதில் தாக்குதலால், பெரம் ரத்த களரியே ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த அருட்தந்தை சோகான்யுப், நான்கு மாதங்களுக்கு பிறகு, செப்டம்பர் 17 தேதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
See More
பாகிஸ்தான் சூஃபி வழிபாட்டு தலத்தில் தற்கொலை தாக்குதல், 12 பேர் பலி
பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய பலுசிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள சூஃபி பிரிவு முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். தற்கொலைத் தாக்குதல்தாரி ஜல் மாக்சி மாவட்டத்திலுள்ள தர்கா பதேபூரினுள் நுழைய முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் காவலர்கள் அவனை வழிமறித்தபோது, தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜியோ டிவி செய்தி அறிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் இந்த தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
See More
60 அன்றாட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு
60 அன்றாட பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி பேரவை கூட்டத்தில் இந்த முடிவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி முறை அறிமுகமானது. அதனால், பல்வேறு அன்றாட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வரி குறைப்பு வந்துள்ளது. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட 60 அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
See More
டோக்லாமில் சீனா மீண்டும் சாலை அமைப்பதால் பதட்டம்
இந்திய, பூடான், சீன நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் சாலை அமைக்ன தொடங்கியுள்ளதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். . அதனை இந்திய ராணுவம் தடுத்துவிட்டதால், பதிலடியாக, இந்திய ராணுவத்தினரின் பதுங்கு குழிகளை சீனா அழித்துவிட்டது. உடனே ஏராளமான இந்திய ராணுவத்தினர் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், டாங்கிகளும் அணிவகுக்க தொடங்கின. போர்ப் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஏற்பட்டது. இப்போது, சீனா மீண்டும், எல்லையில் ராணுவத்தினரை குவித்து பதற்றத்தை அதிகரித்துள்ளது.
See More
உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநராக தமிழர்
ஐக்கிய நாடுகள் அவையின் உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநராக தமிழ் நாட்டை சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சௌம்யா சாமிநாதன் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைப்படுகின்ற எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கின்ற அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலக சுகாதார நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த நிலையில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சௌம்யா சுவாமிநாதன் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. 58 வயதாகும் சௌம்யா குழந்தைகள் நல மருத்துவர்ஃ காச நோய்க்கான சிகிச்சையில் மிகவும் பிரபலமானவர்.
See More
பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு – கமல் ஹாசன் அறிவிப்பு
வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னர், அதே பதவியில் கர்தினால் ரெய்மண்ட் லியோ புர்கெவை திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் நியமித்துள்ளார். அமெரிக்காவின் கர்தினாலான புர்கெவை வத்திக்கானின் உயரிய நீதிமன்ற பதவியில் அமர்த்தியுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று கத்தோலிக்க திருப்பீடம் அறிவித்தது. கர்தினால் அகஸ்டினோ வாலினி, கர்தினால் எடோர்டோ மினிச்சில்லி, பேராயர் பிரான்ஸ் டநீல்ஸ் மற்றும் ஆயர் ஜேஹானஸ் மரியா ஹென்றிக்சுடன் இப்போது கர்தினால் புர்கெவும் நியமிக்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுகளாக வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் பதவியை வகித்து வந்த காதினால் புர்கெவை 2014 ஆம் ஆண்டு நீக்கிவிட்டு, மால்டா சபையின் பாதுகாவலராக நியமித்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நேரத்தில் பெரிய பொறுப்பிலுள்ள ஒருவரை பதவி விலக்குவது வழக்கமாக நடைபெறுகிற வியடமல்ல. மேலும், அந்த பதவியோடு ஒப்புமைப்படுத்தி பார்க்க்க்கூடாத இன்னொரு பொறுப்பில் நியமிதததும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. கர்தினால் புர்கெ, திருத்நதையின் திருமுகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனப்பிய கர்தினால்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
See More
தமிழக சிறையில் இருந்து 776 பேர் நன்னடத்தையால் விடுவிப்பு
தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த கைதிகளில் 776 பேர் நன்னடத்தை காரணமாக விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாக ஏடிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். திருச்சியில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி மையத்தை அவா இன்று தொடங்கி வைத்தபோது இவ்வாற தெரிவித்தார். பல ஆண்டுகளாக தமிழக சிறைகளில் கைதிகள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களில் 776 பேர், நன்னடத்தை காரணமாக விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிறைகளில் வாடும் பல கைதிகளுக்கு சைலேந்திர பாபு மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
See More
ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னை தரமணியில் மழைநீர் சேகரிப்பு
இந்திய நாட்டிலேயே முதன்முறையாக மழைநீரை சேகரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தில், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான கீழ்நிலைத் தொட்டி சென்னை தரமணியில் கட்டியமைக்கப்படவுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நகரின் பல பகுதிகளில் பிரமாண்டமான கீழ்நிலைத் தொட்டி கட்டியமைக்கப்பட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்மாதிரியாக, இந்தியாவில் முதல்முறையாக சென்னை தரமணியில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் ஜப்பான் நிதி ஆதரவோடும், தொழில்நுட்ப உதவியோடு 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கும் மிக பெரிய கீழ்நிலைத் தொட்டி கட்டப்படவுள்ளது. ஒரு கோடி செலவில் உருவாகும் இதனுடைய கட்டுமான பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். 92 அடி நீளத்திலும், 37 அடி அகலத்திலும், 10 அடி ஆழத்திலும் கட்டப்படுகிற தொட்டிக்குள் 2 அடிக்கு ஒன்று வீதம் 600 பிளாஸ்டிக் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இந்தத் தூண்களின் அடிப்பகுதியும். மேல்பகுதியும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 36 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் பெய்யும் மழைநீர் இத்தொட்டியில் சேகரிக்கப்படும் வகையில் இந்த வசதி அமையும். . இத்தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு, விடுமுறை நாட்கள் தவிர்த்து மொத்தம் 250 நாட்களுக்கு 27 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைக்கு அப்பாற்பட்டு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படவுள்ளது.
See More
தடைகள் பல இருந்தாலும், தீவிரவாதம் வளர்வதாக தெரிசா மே வேதனை
எத்தனைதான் தடைகள் போட்டாலும், தீவிரவாதம் தொடர்ந்து வளர்வதாக பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே வேதனை தெரிவித்துள்ளார். லண்டன் பாலத்தில் தீவிரவாதிகள், பாதசாரிகள் மீது கத்திக்குத்தி தாக்குதல் நடத்தியதில், 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயமடைந்தனர். லண்டனின் பாரா சந்தை பகுதியிலும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே இதனை மிகவும் வேதனையான சம்பவம் என கூறியுள்ளார். இந்த தாக்குதலால் தீவிரவாதத்தை வேரோடு அழித்துவிட்டுத்தான், அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட்டுள்ளது என தெரசா மே குறிப்பிட்டுள்ளார். லண்டனில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறப்படும் நபர்களையே கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருவதாக, லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
See More
வட கொரியாவின் ஏவுகணை சோதனை ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல்
வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனைகள் ரஷ்யாவுக்கு விடுக்கப்படும் நேரடி அச்சுறுத்தல் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. வட கொரியா அவ்வப்போது நடத்திவரும் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் வட கொரியாவின் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றன. அந்த பின்னணியில். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் தங்களுக்கான நேரடி அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறியுள்ளது.
See More