உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

எங்களின் எதிரிகள் தீவிரவாதிகளே.. இஸ்லாமியர்கள் அல்ல: ஒபாமா !
இஸ்லாமை தவறான வழியில் பயன்படுத்தும் தீவீரவாதிகள் மீதுதான் போர் தொடுப்பதாகவும், இஸ்லாமியர்கள் மீது இல்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "நாங்கள் இஸ்லாத்துக்கு எதிராக போர் புரியவில்லை. எங்களது போர் இஸ்லாத்தின் மரபைத் திரித்தவர்களுக்கு எதிரானது. ஐ.எஸ். அல்கொய்தா போன்ற தீவிரவாதிகள், இஸ்லாத்தை பாதுகாக்கும் போராளிகள் என்ற போர்வையில் தங்களுக்கென அடையாளத்தை, அங்கீகாரத்தை தேடிக்கொள்ள கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். அமெரிக்காவும் ஏனைய பிற மேற்கத்திய நாடுகளும் இஸ்லாத்துக்கு எதிராகப் போர் புரிந்து வருவதாகவும் அவதூறு பரப்பி வருகிறது. இதைக் கூறித்தான் ஐ.எஸ். படைக்கு ஆள் திரட்டப்படுகின்றது. இளைஞர்கள் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு வெளியில் இருப்பவர்கள் தீவிரவாதிகளின் பொய் பிரசாரத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். மேலும் இஸ்லாமும் - மேற்கத்திய நாடுகளும் எதிரும் புதிருமானவை, நவீன வாழ்வியலும் இஸ்லாமும் ஒத்துப்போகாதவை போன்ற அவதூறு பிரச்சாரங்களைப் புறந்தள்ள வேண்டும்" என பேசியுள்ளார்.
See More
உரசிச் சென்ற இரு விமானங்கள்…திக் திக் நிமிடங்கள்
பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்திய கண்காட்சியில், நேற்று இரண்டு ரெட் புல் விமானங்கள் வானில் சாகசம் செய்து காட்டியபோது, சற்று உரசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்று வருகிறது, இதில் இரண்டு ரெட்புல் விமானங்கள் ஒன்றையொன்று உரசி சென்றது, இருப்பினும் இந்த விபத்தால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மொத்தம் மூன்று ரெட்புல் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது அவை ஒரு லூப்புக்கு முயற்சித்தன. அப்போது ஒரு விமானம் தனக்குக் கீழ் பறந்த இன்னொரு விமானத்தின் புரபல்லரில் போய் மோதி உரசி விலகியது. இந்த சம்பவத்தில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. இருப்பினும் இரு விமானங்களும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டன
See More
தேமுதிக சஸ்பெண்ட்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு….சட்டசபையில் அமளி துமளி
தமிழக சட்டசபையில் இருந்து தே.மு.தி.க.வினர் சஸ்பென்ட் செய்யப்பட்டதையடுத்து, சட்டசபையில் அமளி துமளி ஏற்பட்டது. தமிழக சட்டசபையில் நேற்று சபையின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தே.மு.க.தி.க. உறுப்பினர்கள் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும் அடுத்த கூட்டத் தொடரிலும் தே.மு.க.தி.க.வினர் சிலர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் அடுத்த கூட்டத் தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்படுவது என்ற தண்டனை மட்டும் நீக்கப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், சட்டசபையில் தே.மு.தி.க.வினர் நடந்த விதம் குறித்த வீடியோ காட்சிகளைப் பார்த்து நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படுவதால் நடவடிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதே தவிர, யாருடைய கோரிக்கையையும் ஏற்று திருத்தம் செய்யப்படவில்லை. ஆனால் தே.மு.தி.க.வினர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சியினருக்கும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் சபையில் பேசிக் கொண்டிருந்த போது அவரது பேச்சை நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதில் அதிருப்தி அடைந்த கணேஷ்குமார் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
See More
மாங்குளம் பொலிஸ் பிரிவு அகற்றப்பட்டது
போர் முடிந்ததுடன் மாங்குளம் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்றுடன் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். மாங்குளம் பொலிஸ் பிரிவில் இருந்த 6 பொலிஸ் நிலையங்களில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுடனும் 4 பொலிஸ் நிலையங்கள் வவுனியா பொலிஸ் பிரிவுடனும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாங்குளம் பொலிஸ் பிரிவு அகற்றப்பட்டுள்ளதையடுத்து தற்போது வடக்கில் 42 பொலிஸ் பிரிவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மாங்குளம் பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ முகாம்களில் ஒன்றை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
See More
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த சட்டக் கல்லூரி மாணவர்கள்!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று நடந்தது. இன்று காலை 11.30 மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ஜி.பி. சிக்னலில் குவிந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவர்களை பொலிசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் கொண்டு சென்றனர். சுமார் 6 வேன்களின் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு வேனில் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் அந்த வேனின் கண்ணாடியை உடைத்தனர். நெல்லையில் இன்று காலை சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவர்கள் மறியலை கைவிட்டனர். சேலம் கோரிமேடு அருகில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி முன் மாணவர்கள் சிலர் திடீர்ரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் அரசு கல்லூரி மாணவர்களில் சிலர் இன்று காலை மாணவர் கார்த்திக் தலைமையில் வகுப்பை புறக்கணித்து விட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க கல்லூரி மெயின் கேட்டை ஆசிரியர்கள் இழுத்து பூட்டினர். புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலையில் அமர்ந்து வாகனங்களுக்கு வழிவிடாமல் மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பொலிசார் மறியலில் ஈடுபட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் 41 பேரை கைது செய்தனர். திருச்சி, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
See More
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு
தமிழகம் முழுவதும் 1.90 லட்சம் பேர் எழுதிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு பெற்றவர்களின் விவரங்கள் தனித்தனியாகவும், பாடவாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்குரிய தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படவில்லை. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான சரியான விடைகள் ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஜனவரி 29-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்டப் பாடங்களில் சரியான விடைகள் தொடர்பாக பல்வேறு சான்றுகளுடன் தேர்வர்கள் ஆட்சேபங்களை தெரிவித்தனர். இந்த ஆட்சேபங்களை அந்தந்தப் பாடத்துக்கான நிபுணர் குழுக்கள் பரிசீலித்த பிறகு இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளுடன் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு: இப்போது, 1,790 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி, இடங்கள் குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு தனியாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிராகரிப்பு: இந்தத் தேர்வில் பல தேர்வர்கள் தங்களது விடைத்தாளில், வினாத்தாள் எண்ணைக் குறிப்பிடவில்லை. அவ்வாறு வினாத்தாள் எண்ணைக் குறிப்பிடாத தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
See More
ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள்
ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்துல்லா பதவி விலகியதுடன், புதிய அரசு பொறுப்பேற்றது. இங்கு அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான ஹுயுதி தீவிரவாதிகள் சன்னி பிரிவு, பழங்குடியினர் மற்றும் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்து வருகின்றனர். ஈரானை சேர்ந்த ஷியா பிரிவான இவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது, இருப்பினும் தீவிரவாதிகளின் கை ஓங்கிய நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் நேற்று ஏமன் நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தீவிரவாதிகள் டெலிவிஷனில் அறிவித்தனர். மேலும் இடைக்கால ஜனாதிபதியாக இருந்த அபேத் ரப்போ மன்சூர் ஹாதியை நீக்கியதுடன், அவருக்கு பதிலாக ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி கவுன்சிலையும் நியமித்தனர். தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்ததுடன், 551 கொண்ட புதிய நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். குடியரசுமாளிகையில் இருந்து வெளியான இந்த அறிவிப்பை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாசித்துள்ளார்.
See More
விறுவிறுப்பாக நடந்த டெல்லி வாக்குபதிவு
70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் இன்று காலை வாக்குபதிவு தொடங்கியது. டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன, மொத்தம் 673 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்குசாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டெல்லியில் மொத்தம் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் 66 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்த தடவை வாக்குபதிவு சதவீதம் சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குபதிவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 12,171 வாக்குசாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 714 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு இருந்ததால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் உள்ள இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வந்து அதிக அளவில் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அதிகாலையிலேயே டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். கெஜ்ரிவால், கிரண்பேடி ஆகியோரும் இதே போல் தகவல் வெளியிட்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தங்கள், சோனியா காந்தி, கிரண் பேடி, கிரண் பேடி ஆகியோர் வாக்குசாவடிகளில் வாக்களித்தனர். இன்று மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் பெட்டிகளுக்குள் வைத்து சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். 10-ந் திகதி(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
See More
தைவானில் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 19 பேர் பலி
தைவான் நாட்டில் 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று, சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் இன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் பயணித்த பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
See More
யாழில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்
இலங்கையின் 67வது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டப்பட்டது. அந் வகையில் யாழ். மாவட்ட செயலகத்தில், மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கம் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதான பணிகளும் இடம்பெற்றது.
See More