உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய திட்டங்கள்!- ஜனாதிபதி
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக படைகளின் பிரதானியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்மூலம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்று அவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார். தேசிய பாதுகாப்பை பலப்படுத்த உள்நாட்டின் ஜனநாயக திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால கூறினார். இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
See More
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு
புதுடெல்லி - இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பகல் 11 மணிக்கு டெல்லி சிறிகோட்டை அரங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது, இந்தியாவின் மிகச் சிறந்த நட்பு நாடு அமெரிக்காதான் என்று நான் நம்புகிறேன். சமீப ஆண்டுகளில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மட்டுமே வறுமையில் இருந்து ஏராளமான மக்களை மீட்டுள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். அணுசக்தி துறையில் இந்தியாவின் உண்மையான நல்ல நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியா கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இதை அமெரிக்கா வரவேற்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும். பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா போன்ற நாடுகள் சுத்தமான எரிபொருளுக்கு மாற வேண்டியது அவசியமாகும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.ஒரு நாட்டில் பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அந்நாட்டின் வளர்ச்சி அமையும். பெண்கள் வெற்றி பெற்றால், அந்த நாடே வெற்றி பெறும்.நாட்டில் பல மதங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றின் இலக்கு ஒன்றுதான். இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும், எந்த மதச்சார்பின்மையும் இல்லாத விஷயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே தான் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தை உரிய முறையில் பயன்படுத்தும் போது நமது நாடுகள் மேலும் வலிமை பெறும்.இந்தியாவில் இருந்து நிறைய இளைஞர்கள் அமெரிக்கா வருகிறார்கள். ஆனால் இந்திய இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி வருவதை விட அமெரிக்க இளைஞர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்கா வருவதை நான் வரவேற்கிறேன். இந்தியர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்துவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார். சமையல்காரரின் பேரனான நான் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறேன். உலகில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மட்டுமே இதுபோன்று நடப்பது சாத்தியமாகும்.நமது இரு வரலாறு வேறு வேறாக இருக்கலாம். ஆனால் நமது சிந்தனைகள் ஒன்றுதான்.அமெரிக்கர்களும், இந்தியர்களும் மிகச் சிறந்த உழைப்பாளிகள் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலமாக உள்ளது.இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. ஆனால் கடவுளின் கண்ணுக்கு நாம் அனைவரும் சமம்.இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்பதால் அதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தியா எனக்கு இந்த கவுரவத்தை கொடுத்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த விவேகானந்தரை 150 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வரவேற்று உபசரித்தது. அவர்தான் அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு இந்தியாவின் கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது.எனவே இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும். இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.உள் கட்டமைப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. அது போல பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்.அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்திருந்தால், இந்த உலகம் என்றென்றும் பாதுகாப்புடன் இருக்கும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எங்களை பல வழிகளில் பலப்படுத்தியுள்ளனர். அது போல இங்கு உள்நாட்டில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கொடுத்து இருக்கிறீர்கள். இதன் மூலம் ஜனநாயகத்தை பேணுவதில் இந்தியா, உலகின் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.வாழ்வில் நான் பல தடவை, என் நிறம் காரணமாக வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளேன். நான் கிறிஸ்தவன் அல்ல முஸ்லிம் என்று கூட வதந்தி கிளப்பினார்கள்.ஆனால் நான் பொறுமையை கைக்கொண்டேன். அதில்தான் மதத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.பெண்களுக்கு நாம் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும். நான் மிகவும் மன உறுதி கொண்ட, தைரி
See More