உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

மூழ்கிய கப்பலில் இருந்து 33 பேர் மீட்பு
மங்களூரு கடற்கரை அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 33 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியுள்ளனர். அரபிக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால். கர்நாடகாவின், மங்களூருவை அடுத்து 4 கிமீ தொலைவில் இருக்கும் கடற்கரையிலிருந்து 250 மீ தொலைவில் சென்று கொண்டிருந்த கப்பல் காற்றின் வேகம் காரணமாக கடலில் மூழ்கியது. கடலோர காவல்படையினருக்கு எச்சரிக்க வாண வெடி வெடித்து தகவல் கொடுத்ததை அடுத்து, விரைவாக செயல்பட்ட கர்நாடக கடலோர காவல்படையினர், விரைந்து சென்று 33 பேரை மீட்டுள்ளனர்.
See More
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக பர்மிங்ஹாம் எட்க்பாஸ்டன் விளையாட்டு திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 48 ஓவர்களில் 319 ஓட்டங்கள் இந்தியா எடுத்திருந்த நிலையில் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பாகிஸ்தான் ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. நான்காவது ஓவரை ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. சற்றுநேரம் நிறுத்தப்பட்டிருந்த இந்த ஆட்டம் மீண்டும் துவங்கிய போது, 41 ஓவர்களில் 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்தடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் யாரும் நிலைத்து ஆடாத காரணத்தால் 33.4 ஓவர்களில் 164 ரன்களை மட்டுமே எடுத்து பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இந்திய தொடக்க ஆட்டக்காரரர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஷிகர் தவான் 68 ரன்களையும், ரோகித் சர்மா 91 ரன்களையும் எடுத்தனர். இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் எல்லா திசைகளுக்கும் அடித்து பந்தாடினர். 32 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசிய யுவராஜ்சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 81 ரன்களுடன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். .
See More
மண்ணெய்ணெய் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம்
ஓய்வூதிய திட்டப் பயன்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கு அரசு வழங்கும் மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் மானியம் அல்லது அடல் ஓய்வூதிய திட்ட உதவி பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். எனவே ஆதார் அடையாள அட்டை இல்லாவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அரவு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அடையாள அட்டை வரும்வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு சரியாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆதார் அடையாள எண்ணை அரசின் சலுகைகள் பெறுவதற்க்கு கட்டாயமாக்க கூடாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
See More
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் தென் மேற்கு பருவ மழை
தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See More
உலக வெப்பநிலை உயர வாய்ப்பு
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது மலகளவில் மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் உலக வெப்பநிலையில் மேலும் 0.3 டிகிரி செல்சியஸ் உயரும் என வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் அமைந்துள்ள உலக வானிலை மையத்தின் வளிமண்டல ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர், டியோன் டெர்ப்லேன்ச் செய்தியாளர்களிடம் இது பற்றி தெரிவித்தார். புவிவெப்பமடைவதை தடுப்பதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தை 2015 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட வகையில் அனைத்து உலக நாடுகளும் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பதை குறைக்கும் முயற்சிகளுக்கு ஒப்புகொண்டன. அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன. எனவே, அமெரிக்கா பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
See More
இந்தியாவின் மிக நீண்ட பாலத்தில் திறந்த ஒரு வாரத்தில் விபத்து
இந்தியவின் மிக நீளமான பூபன் ஹஜாரிகா பாலம் சமீபத்தில் தலைமையமைச்சர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் திறந்து வைத்த ஒரு வாரத்தில் பாலத்தில் விளக்கு அமைக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் கட்டப்பட்டுள்ள இந்த மிக நீளமான ஆற்றுப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது அசாம் – அருணாச்சல மக்களின் போக்குவரத்து பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைத்துள்ளது. 2056 கோடி ரூபாய் செலவில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த பாலத்தை தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்து இந்தியாவிலேயே மிக நீளமான பாலத்தை நாட்டிற்கு அர்பணிப்பதில் மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டார். இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர். வெளிச்சம் இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்படலாம் என இப்பகுதி மக்கள் பிதியடைந்துள்ளனர்.
See More
பிராணவாயு இல்லாமல் எவரஸ்ட் சிகரம் அடைந்த இந்திய ராணுவத்தினர்
உலகிலேயே மிகவும் உயர்ந்த எவரஸ்ட் மலை சிகரத்தை இந்திய ராணுவ குழுவினர் பிராணவாயு சிலிண்டர் எதுவுமின்றி ஏறி சாதனை படைத்துள்ளனர். இந்திய ராணுவத்தின் 10 பேர் கொண்ட குழு இந்த சாதனையை படைக்க அமைக்கப்பட்டது. அதில் நான்கு பேர் இந்த சாதனையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 4 ஆயிரத்திற்கும் மேலானோர் சென்றடைந்துள்ளனர். இதில் 187 பேர் மட்டுமே தனியாக அதில ஏறி சாதனை புரிந்தவர்கள். அதில் பிராணவாயு சிலிண்டர் இல்லாமல் சாதனை புரிந்திருக்கிற முதல் குழு இது தான்.
See More
கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா
திமுக தலைவர் கவைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளும், சட்டமன்றத்திற்கு வெற்றிபெற்று பணிபுரிந்த 60வது ஆண்டு வைரவிழாவும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. சட்டமன்றத்தில் நுழைந்ததை குறிக்கும் வகையில். நடத்தப்பட்ட வைரவிழா பொதுக்கூட்டத்தில், இந்திய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கலைஞரின் அரசியல் பங்களிப்பை புகழ்ந்து பேசிய அவர்கள், ஆளும் பாரதீய ஜனதாவை முறியடிக்க அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். கருணாநிதியின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியபோது தெரிவித்தார். மத சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் கருணாநிதி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார். கின்னஸ் புத்தகத்தில் எழுதி பயிலப்பட வேண்டியவர் கருணாநிதி என்று புதுவை முதல்வர் நாராயணசாமி புகழ்ந்து பேசினார். . சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவராக திகழ்கிறார் கருணாநிதி என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பாராட்டினார்.
See More
அயர்லாந்து நாட்டின் தலைமையமைச்சராக இந்திய வம்சாவளி ஓரினச்சேர்க்கையாளர்
அயர்லாந்து நாட்டின் தலைமையமைச்சராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஓரினச்சேர்க்கையாளர் தேர்வு செய்யப்படுள்ளார் 38 வயதாகும் அவரது இயற்பெயர் லியோ வாரத்கர். மருத்துவரான இவரது தந்தை இந்தியாவின் மும்பை மாநகரைச் சேர்ந்தவர். தாய் அயர்லாந்து நாட்டுப் பெண்மணி. லியோ, தான் அடிப்படையில் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்த பிறகே, தலைமையமைச்சர் தேர்தலில் அவர் களமிறங்கினார். அவர் தலைமையமைச்சராக தேர்வு செய்யப்படுள்ளதால், அயர்லாந்து வரலாற்றில் முதல் ஓரினச்சேர்க்கையாள தலைமையமைச்சர் மற்றும் இளம் வயதில் தலைமையமைச்சர் பதவியை பிடித்த நபர் என்ற பெருமையை லியோ பெற்றுள்ளார்..
See More
பிலிப்பீன்ஸ் சுற்றுலா விடுதியில் தாக்குதல், 36 பேர் பலி
பிலிப்பீன்ஸின் தலைநகர் மணிலாவிலுள்ள சுற்றுலா விடுதியில்ல், மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் 36 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுதியில் ஏராளமானோர் கூடியிருந்த நேரம் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஊடுருவியதாக கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டை வீசி, பெரும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். நீண்டநேரம் புகை மூட்டம் நிலவியதில், 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் 6 அடி உயரத்தில் சரளமாக ஆங்கிலம் பேசினார் என்றும் கூறப்படுகிறது.
See More