உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

நார்வேயில் தமிழ் செம்மொழி மாநாடு
தமிழ் மொழியைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழின் சிறப்கப எடுத்துகூறும் மாநாடுகள், கருத்தரங்குகள் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. தமிழர்கள் அதிகம் வாழும் நார்வே நாட்டின் பேர்கன் நகரில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் செம்மொழித் திருநாள் விழா இன்று நடைபெறுகிறது. ‘செம்மொழித் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பிலும், புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் மு.இளங்கோவன் ‘செம்மொழியின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் சண்முகதாஸ் ‘செம்மொழி என்றால் என்ன?’ என்ற தலைப்பிலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர், மனோன்மணி சண்முகதாஸ், ஒஸ்லோ நகரைச் சார்ந்த எழுத்தாளர் உமாபாலன் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆர்த்தி உமாபாலன் நடனம், பிருந்தாவன சாரங்க இசை நிகழ்ச்சி, ஒன்பது பாகை வடக்கு இசை எனக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பேர்கன் தமிழ் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
See More
கருணாநிதியின் 94வது பிந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழா
திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை வைர விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் வைர விழாவும், அவரது 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவுக்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
See More
ரஷ்யாவின் உதவியோடு கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்
கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள் அமைர்துகொள்ள ரஷ்ய அரசுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. 6 நாள் வெளிநாட்டு பயணத்தின்போது, ரஷ்யா சென்றுள்ள தலைமையமைச்சர் நரேந்திர மோடி, அதன் அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் மேலும் இரண்டு புதிய அணு உலைகளை ரஷ்யாவின் உதவியுடன் அமைப்பதற்கு ஒப்பந்தம் உட்பட மொத்தம் 5 ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்து இட்டுள்ளனர். பாகிஸ்தானுடனான ரஷ்யாவின் உறவு இந்தியாவுடனான நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். இந்தியா-ரஷ்யா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு புதிய திசையி்ல் பயணிப்பதாக தலைமையமைச்சர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
See More
பூகோளத்தின் கிழக்கில் ஏவுகணையில் நாங்களே சிறந்தவர் – வட கொரியா
பூகோளத்தின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் ஏவுகணை சோதனையில் நாங்களே தலைவன், எங்களது அணு ஆயுத சோதனைகளை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியா கூறியுள்ளது. தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தும் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. அமெரிக்காவின் இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியாவின் அரசு செய்தித்தாளான ரோடங் சின்மனில் வந்துள்ள கட்டுரையில், "கிழக்கு பகுதியில் ஏவுகணை சோதனைகளில் நாங்களே தலைவன். எங்களது அணுஆயுத சோதனைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா தயராக இருக்கிறது. அதிபர் கிங் ஜோங் உன்னின் ஒப்புதலுக்காகவே காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
See More
94வது பிறந்த நாளை கொண்டாடும் கலைஞர் கருணாநிதிக்கு குவியும் வாழ்த்துக்கள்
உடல்நல குறைவால் வாடும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஜூன் 3ஆம் நாளில் கொண்டாடும் 94வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'மத்தியில் ஆட்சி செய்ய பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் தன்னை அர்பணித்துக் கொண்டவர் கருணாநிதி' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவரின் பிறந்தநாள் விழா மற்றும் வைர விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் என்ற தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் விழா, அவர் சட்டமன்றத்திற்கு முதல் முறையாக சென்ற நினைவின் 60வது ஆண்டு வைர விழாவாக கொண்டாடப்படுகிறது.
See More
சென்னை சில்க்ஸ் துணிக்கடையை இடிக்கும் பணி தொடக்கம்
சென்னை தியாகராய நகர் தீவிபத்தில் சிக்கிய 400 கிலோ நகைகள் பற்றியும் அவற்றை மீட்பது பற்றியும் காவல்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த ’தி சென்னை சில்க்ஸ்’ புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. 200க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வியாழக்கிழமை காலை தீயை அணைத்தனர். தீயால் மிகவும் பாதிக்கப்பட்டு, உறுதியற்ற நிலையில் இருக்கும் அந்த கட்டிடத்தை இடிக்க இருப்பதால். அருக்கிலுள்ள கடைகளை திறக்க வேண்டாம் என்றும், பொது மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கி செயல்பட்டு வருகிறது.
See More
டிடிவி தினகரனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்
இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினர் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் அவரது நண்பர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இருவரும் தலா ரூ.5 லட்சம் செலுத்துமாறும் தங்களுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் டிடிவி தினகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
See More
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகில் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இந்திய தூதரகத்தின் அருகில் அதிக ஆற்றல் மிக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்த ஆப்கானிஸ்தானில், தற்போது இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அண்டை நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலைய பகுதியில் மே 30 ஆம் நாள் அதிக சக்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்திய தூதரக கட்டடம் சேதமடைந்தாலும், அதிலுள்ள அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குண்டுகள் நிரப்பப்பட்ட சீருந்து மூலம் நடத்தப்பட்டுள்ள இந்த தற்கொலைப்படைத் தாக்குதல், ஈரான் நாட்டு தூதரகத்தை இலக்கு வைத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டிவெடிப்பில் சுமார் 50 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு இந்திய தலைமையமைச்சர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் கூறியுள்ளார்.
See More
குஜராத்தில் இராட்சத ஆலங்கட்டி மழை, பொது மக்கள் பீதி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பெய்த இராட்சத ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சூரத் அருகே உள்ள மாந்த்வி பகுதியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. வானத்தில் இருந்து கற்கள் விழுவதைப் போல பலத்த சத்தத்துடன் ஆலங்கட்டிகள் விழுந்தன. பெரும் சத்தமும் கேட்டதால் மக்கள் எல்லோரும் வெளியே வர அச்சமுற்று, வீட்டிலேயே முடங்கினர். இந்தியாவின் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்வது சற்று அபூர்வமே. இதனால், குஜாத்தில் பெய்த இராட்சத ஆலங்கட்டி மழை ஆச்சரியத்தையும், பயத்தையும் எற்படுத்தியுள்ளது.
See More
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழர் முதலிடம்
கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பெற்றுள்ளார். யுபிஎஸ்சி எனப்படும் மத்திய தேர்வாணைக்குழு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சுமார் 26 பணித்துறைகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு வேலை வழங்கப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் தற்போது அதன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில், தமிழக அளவில் பிரதாப் முருகன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் பிரதாப் முருகன் 21வது இடம் பிடித்துள்ளார். இதில் மொத்தம் 1099 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர்.
See More