உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

உலக செய்தி விவரங்கள்

NEXT

தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல்வாதிகள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் - நாமல்

கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல்வாதிகள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டதால் அவர்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.   புலம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை மீதான தமிழர்களின் கோபத்தை தணிக்கவே ரஜினிகாந்த்தை பகடைக்காயாக பயன்படுத்துவதாலும், அவர்களின் அழைப்புக்கு பின்னணியில் அரசியல் உள்ளதாலும் இந்த பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த், அரசியல் கட்சித் தலைவர்களின் காரணங்களை தன்னால் முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் எனினும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தாம் இலங்கைக்கு செல்ல போவதில்லை என்றும் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தார்.