உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

உலக செய்தி விவரங்கள்

NEXT

அமெரிக்காவில் மீண்டும் ஒரு இனவெறி சம்பவம் சீக்கிய பெண் ஒருவர் மிரட்டப்பட்டார்

நியூயார்க்: லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடம் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியர்கள் இந்தியர்கள் உட்பட வெளி நாட்டினர் கொல்லப்பட்டு வரும் நிலையில் சீக்கிய பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இனவெறி சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்பிரீத் ஹெயர் என்ற சீக்கிய அமெரிக்க பெண் நியூயார்க் மெட்ரோ ரயிலில் அமெரிக்கர் ஒருவரால் லெபனான் நாட்டுக்கு திரும்பிப்போ என மிரட்டியுள்ளார். ராஜ்பிரீத் ஹெயர் என்ற பெண் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்காக நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் சென்றுள்ளார். அப்போது அந்த ரயிலில் பயணித்த அமெரிக்கர் ஒருவர், "அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா உனக்கு? இந்த நாட்டுக்கு அவர்கள் செய்த அர்ப்பணிப்புகள் தெரியுமா உனக்கு?" எல்லாம் உன்னை போன்ற ஆட்களால்தான் என கூறியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளார் திட்டிய அவர் "லெபனானுக்கு திரும்பிப் போ. எந்த வகையிலும் இந்த நாட்டை சேர்ந்தவராக நீ ஆகிவிட முடியாது" என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்களும் கவனித்து வந்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள ராஜ்பிரீத் ஹெயர், சிறுபான்மையினராக இருப்பவர்கள் இதுபோன்ற அனுபவங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் மீதான அமெரிக்கர்களின இனவெறித் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் வெளி நாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.