உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

உலக செய்தி விவரங்கள்

NEXT

பயணியர் விமானத்தை சுட்டு வீழ்த்த கட்டளையிட்ட புதின்

2014ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருக்கிறார். ரஷ்யாவில் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதினின் பதவிக்காலம் நிறைவடையுள்ள நிலையில், 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு மணிநேர பரப்புரை ஆவணப்படத்தில், 2014-ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றபோது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 7-ம் தேதி குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காகு அவர் காத்திருந்ததாகவும், அப்போது உக்ரைனில் இருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதைக்கொண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்க்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க மர்ம நபர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்ததாக புதின் தெரிவித்திருக்கிறார். குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். எனவே அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சில நிமிடங்களில், அந்த தகவல் பொய்யானது என்று அதிகாரிகள் புதினிடம் தெரிவித்திருக்கிறனா. அந்த உறுதியான தகவலை அடுத்து அந்த விமானம் துருக்கிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக விளாடிமிர் புதின் இந்த ஆவணப்படத்தில் தெரிவித்திருக்கிறார்.