உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

இலங்கை செய்தி விவரங்கள்

NEXT

வடமாகாண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

வடமாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த போராட்டத்திற்கே இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவினை வழங்கியுள்ளது. மேலும், வடமாகாணத்தில் பல நாட்களாக மக்கள் தமக்கு சொந்தமான நில மீட்புக்காகவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களினால் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் மயப்படுத்தப்பட்ட நீதி வேண்டிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது அனைத்து சமூக அமைப்புக்களினதும், தொழிற்சங்கங்களினதும் தார்மீகக் கடமையாகும். அத்துடன் மக்களின் நீதி வேண்டிய நியாயமான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்து சக்திகளும் தமது சமூக பொறுப்பை உணர்ந்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.