உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

மன்னிப்பைப் பெறுபவருக்கு, மன்னிக்கும் கடமையுண்டு
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து அடுத்த நாளே கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சி புனித ஸ்தேவானின் திருவிழா சிறப்பிக்கப்படுவது, கிறிஸ்துவுக்காக, அவரின் சீடர் தன் உயிரையே வழங்கியதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவானின் திருவிழாவையொட்டி இச்சனிக்கிழமை நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேற்று மண்ணில் பிறந்த இயேசுவுக்கான சாட்சி இன்று விண்ணில் பிறந்துள்ளார் என்றார். இயேசுவைப்போல் இந்தப் புனிதரும் தன்னை கொல்ல வந்தவர்களுக்காக செபிப்பதுடன், அவர்களை மன்னிக்கிறார். தன் பகையாளிகளுக்காக செபிப்பதுடன், அவர்களை அன்புகூர்பவராகவும், தன் வாழ்வையேக் கையளிப்பவராகவும், காட்டப்படுகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித ஸ்தேவான் கொல்லப்பட்ட நிகழ்வில், நாம் சவுலையும் காண்கிறோம், இந்த சவுலே பின்னர் பவுலாக மாறியவர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, புனித ஸ்தேவானின் மன்னிப்பைப் பெற்ற பெரும் புனிதர் பவுல், இறைவனின் அருளாலும், ஸ்தேவானின் மன்னிப்பாலும் மனமாற்றத்தின் வித்துக்களை தன் உள்ளத்தில் ஏற்றார் என கூறமுடியும் என்றார். நாமும் இறைவனின் மன்னிப்பில் புதுப்பிறப்பெடுக்கிறோம் என்ற திருத்தந்தை, திருமுழுக்கின்போது மட்டுமல்ல, ஒவ்வொருமுறை நாம் இறைவனின் பாவ மன்னிப்பைப் பெறும்போதும், நம் இதயம் புதிதாகப் பிறக்கின்றது எனவும் கூறினார். இறைவனின் மன்னிப்பைப் பெறும் நாம், மற்றவர்களை மன்னிக்கும் கடமையைப் பெற்றுள்ளோம் என்பதையும், நண்பகல் மூவேளை செப உரையில் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
See More
மறுவாழ்வு பெறும் இளையோர் மனங்களில் மீண்டும் இயேசு பிறப்பு
போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மறுவாழ்வு பெற்றுவரும் இளையோரின் மனங்களில் குழந்தை இயேசு மீண்டும் பிறக்க வருகிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார். போதைப்பொருள் பயன்பாடு, புலம்பெயர்தல் ஆகிய துன்பங்களில் சிக்குண்ட இளையோருக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கத்தோடு, உரோம் நகரில் இயங்கிவரும் CeIS என்ற மையத்தில், இச்செவ்வாய் மாலை கிறிஸ்மஸ் விழா திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார். பெத்லகேமில் கிறிஸ்து ஆயிரம் முறை பிறந்தாலும், அவர் நம் உள்ளங்களில் பிறக்கும்வரை அது கிறிஸ்மஸ் விழாவாக மாறாது என்று ஜெர்மானிய ஆழ்நிலை ஞானி, Angelus Silesius அவர்கள் கூறிய வார்த்தைகளை தன் மறையுரையில் சுட்டிக் காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், தவறுகளை உணர்ந்து, திருந்தி வாழும் உள்ளங்களில் கிறிஸ்துவின் பிறப்பு இன்னும் பொருள் உள்ளதாக மாறுகிறது என்று குறிப்பிட்டார். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நாம் கொண்டாடும் இந்த கிறிஸ்மஸ் விழாவின் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், CeIS மையத்தில் உள்ள அனைத்து இளையோருடனும் மனத்தால் ஒன்றித்துள்ளார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார். இளையோரின் மறுவாழ்வுக்கென பணியாற்றிவரும் CeIS மையத்தின் கிறிஸ்மஸ் விழாவில், புலம் பெயர்ந்து வாழும் பல இளையோர் கலந்து கொண்டனர்.
See More
திருத்தந்தை பிரான்சிஸ் - Charlemagne விருதுக்குத் தெரிவு
ஐரோப்பிய கண்டத்தில் வழங்கப்படும் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான, Charlemagne விருதினை, 2016ம் ஆண்டு பெறுவதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, இப்புதனன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைதி, கூட்டுறவு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரும், பொதுவாக, உலக அமைதிக்கும், மனித சமுதாய முன்னேற்றத்திற்கும் திறம்பட உழைத்தவர்களும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மனதைத் தளரச் செய்யும் பல்வேறு நிகழ்வுகளால் உடைந்துபோயிருக்கும் ஐரோப்பிய சமுதாயத்தைத் தட்டியெழுப்பி, அச்சமுதாயத்திற்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கும் ஒரு மனசாட்சியின் குரலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயலாற்றியுள்ளார் என்று இவ்விருதுக் குழுவின் சார்பாக, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய Aachen நகர மேயர், Marcel Philipp அவர்கள் கூறினார். சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவும், உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளவும் உலக சமுதாயத்தை ஊக்குவித்து வருபவர், திருத்தந்தை பிரான்சிஸ் என்பதை, மேயர் Philipp அவர்கள் எடுத்துரைத்தார். புனித உரோமைய பேரரசை உருவாக்கிய Charlemagne அல்லது, பெரிய சார்லஸ் என்ற பேரரசரின் பெயரால் உருவாக்கப்பட்டு,1950ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, 2004ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக, கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவன்று வழங்கப்படும் இவ்விருது, வரும் ஆண்டு, உரோம் நகருக்குக் கொணரப்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
See More
மனித கிறிஸ்மஸ் மரம் அமைத்து கேரளா கின்னஸ் சாதனை
மனிதர்களைக் கொண்டு உலகில் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரத்தை அமைத்து உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது கேரளா. கடந்த ஆண்டில் கொண்டூராஸ் நாட்டில் வைக்கப்பட்ட மிகப் பெரிய மனிதக் கிறிஸ்மஸ் மர சாதனையை இவ்வாண்டு கேரளா முறியடித்துள்ளது. டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று, ஆலப்புழாவின் சென்கனூர் நகராட்சி அரங்கத்தில் ஏறத்தாழ 4,030 பேர் தங்களுக்குரிய ஆடை நிறங்களுடன் கூடி கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர். பிற்பகலில் தொடங்கிய இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. கடந்த ஆண்டில் கொண்டூராஸ் நாட்டில் ஏறத்தாழ 2,945 பேர் கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர்.
See More
திருப்பீட நிர்வாகிகளுக்கு திருத்தந்தை உரை
திருப்பீட தலைமையகத்திற்குத் தேவைப்படும் இன்றியமையாத கூறுகளை வலியுறுத்திய அதேவேளை, இரக்கத்தின் யூபிலி ஆண்டு சுட்டிக்காட்டும் நன்றியுணர்வு, புதுப்பித்தல், தவம், ஒப்புரவு ஆகியவற்றின் பாதையைப் பின்செல்லுமாறு திருப்பீட நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் திருப்பீட நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த சில நாள்களாக எனக்கு காய்ச்சல், அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டு உரை வழங்குகிறேன், மன்னிக்கவும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே சந்திப்பில் திருப்பீட தலைமையகத்தைப் பாதித்திருந்த 15 நோய்கள் பற்றிக் கூறினேன், இன்று அதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் கூறுகிறேன் என்றுரைத்த திருத்தந்தை, திருப்பீட தலைமையகத்தில் நாம் சந்தித்த துர்மாதிரிகைகள் வேதனையை அளித்தாலும், திருப்பீடச் சீர்திருத்தங்கள், மேலும் மிக உறுதியோடும், பொறுப்புணர்வோடும் தொடர்ந்து இடம்பெறும் என்றும் கூறினார். பரிந்துரைகள் மற்றும் இலஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது, ஆன்மாக்களைப் புண்படுத்தி, நம் சான்று வாழ்வின் நம்பகத்தன்மையை அச்சுறுத்தும் துர்மாதிரிகைகளையும், அதிகாரத்துவப் பாணியில் செயலாற்றுவதையும் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் விளக்கினார் திருத்தந்தை. மேலும், நன்மைபுரிவதை அழிக்கும் கோட்பாடாக மாறும் உண்மையில்லாத பிறரன்பு, அன்பில்லாத உண்மை நேர்மையற்ற தீர்ப்புக்கு இட்டுச்செல்லும்.. என்று, மறைப்பணி, கனிவு உட்பட பல கூறுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செபத்தோடு இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் அனைவரும் உழைப்பாளர்கள், கட்டட மேலாளர்கள் அல்ல, நாம் பணியாளர்கள், மெசியா அல்ல. நமக்குச் சொந்தமில்லாத எதிர்காலத்தின் இறைவாக்கினர்கள் நாம் என்று இச்செபம் நிறைவடைகின்றது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
பெற்றோர், பிள்ளைகள்மீது காட்டும் அன்பே விலைமதிப்பில்லா பரிசு
பெற்றோர், பிள்ளைகளுக்கு வழங்கும் மிகவும் விலைமதிப்பில்லாத பரிசு பொருள்கள் அல்ல, மாறாக, அவர்கள் பிள்ளைகள்மீது காட்டும் அன்பே என்று வத்திக்கான் பணியாளர்களிடம் இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள் நண்பகலில் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், வத்திக்கானில் பணியாற்றும் அனைவரையும், அவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். வத்திக்கானில் இடம்பெற்ற துர்மாதிரிகைகளுக்கு மன்னிப்புக் கேட்ட திருத்தந்தை, வத்திக்கான் பணியாளர்கள், தங்களின் திருமண வாழ்வை மேம்படுத்தி, பிள்ளைகளோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் பண்பை, எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் காரியமாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் முதிர்ச்சிப் பண்பில் வளர்வதற்கு அவர்களுடன் உரையாடல் நடத்துமாறும், தாத்தா பாட்டிகளையும், வயதானவர்களையும் அன்புடன் பராமரிக்குமாறும், பிள்ளைகள் வளர்ப்பில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை உணருமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், அன்றைய நாள் மாலைக்குள் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்பதை மறக்கக் கூடாது, இந்தப் பனிப்போர் அடுத்த நாளைக்குத் தொடரக் கூடாது, அடுத்த நாளைக்கு அந்தப் பனிப்போரைத் தொடர அனுமதிப்பது, மிகவும் ஆபத்தானது என்றும், இச்சந்திப்பில் கலந்துகொண்ட திருமணமான தம்பதியரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் திருமணத்தின் அடிப்படைக் கூறு, திருமண வாழ்வையும், பிள்ளைகளையும் பராமரிப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றாட வாழ்வில் கணவருக்கும் மனைவிக்கும் இடையே, பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே, சகோதர சகோதரிகளுக்கு இடையே இரக்கப்பண்பு விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
மனித கிறிஸ்மஸ் மரம் அமைத்து கேரளா கின்னஸ் சாதனை
மனிதர்களைக் கொண்டு உலகில் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரத்தை அமைத்து உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது கேரளா. கடந்த ஆண்டில் கொண்டூராஸ் நாட்டில் வைக்கப்பட்ட மிகப் பெரிய மனிதக் கிறிஸ்மஸ் மர சாதனையை இவ்வாண்டு கேரளா முறியடித்துள்ளது. டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று, ஆலப்புழாவின் சென்கனூர் நகராட்சி அரங்கத்தில் ஏறத்தாழ 4,030 பேர் தங்களுக்குரிய ஆடை நிறங்களுடன் கூடி கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர். பிற்பகலில் தொடங்கிய இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. கடந்த ஆண்டில் கொண்டூராஸ் நாட்டில் ஏறத்தாழ 2,945 பேர் கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர். ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
See More
கிறிஸ்மஸ் விழாவை எளிமையாகக் கொண்டாடுங்கள், மதுரை பேராயர்
தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், கிறிஸ்மஸ் பெருவிழாவை எளிமையாகக் கொண்டாடுமாறு மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், கிறிஸ்மஸ் என்பது, கொடுப்பதும், அக்கறை காட்டுவதுமாகும், எனவே, இவ்வாண்டு கிறிஸ்மஸ், கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுடன் இணைந்து கொண்டாடுவதாய் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டால் மட்டுமே கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பொருள் உள்ளதாக இருக்கும் என்றும் மதுரை பேராயரின் அறிக்கை கூறுகிறது. தமிழக கத்தோலிக்கத் திருஅவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவி வருகின்றது என்றும் பேராயர் அந்தோணி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை, கடலுார், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஏராளமான மக்கள், வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் வகையில், மதுரை உயர்மறைமாவட்டத்தில் உள்ள 69 பங்குகளைச் சேர்ந்த மக்களுக்கு தெரிவித்தோம். இதை ஏற்று ஏராளமானோர் பணம், பொருளுதவி அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வுதவிகளை நேரடியாக வழங்கி வருகிறோம். பிரச்சனைகளைக் களைந்து தீர்வு காண்பதில் அக்கறை காட்டி வருகிறோம். கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை எளிமையாகக் கொண்டாட அறிவுறுத்தியுள்ளோம் என்றும் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார். ஆதாரம் : The Hindu/வத்திக்கான் வானொலி
See More
சிரியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்காவில் அமைதிக்கு அழைப்பு
சிரியா, லிபியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளில் அமைதி நிலவவும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டை தான் பாராட்டுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, நம்பிக்கை நிறைந்த விருப்பத்துடனும், மனத்தாராள உணர்வுடனும் இந்த அமைதிப் பாதையில் தொடர்ந்து செயல்படுமாறு விண்ணப்பித்தார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள சிரியா குறித்த அமைதித் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, அனைத்துலக சமுதாயம் தெளிவான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், லிபியாவில் தேசிய ஒன்றிப்பு அரசு, அண்மையில் கொண்டுவந்துள்ள திட்டம் அந்நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது, இத்திட்டம் வெற்றியடையுமாறும் செபிக்கக் கேட்ட திருத்தந்தை, நிக்கராகுவா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகளுக்கிடையே சிதைந்திருந்த உறவுகள் சீர்செய்யப்படுமாறும் கூறினார். இவ்விரு நாடுகளுக்கிடையே இடம்பெற்ற எல்லைப் பிரச்சனைக்குக் கடந்த வாரத்தில் பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றிக் குறிப்பிட்டு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு வழியாக இவ்விரு நாடுகளும் உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
See More
அன்னை தெரேசா அறிவிப்பு, இரக்கத்திற்கு விடுக்கப்படும் அழைப்பு
அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது, நாம் இதுவரை பெற்றுள்ள கிறிஸ்மஸ் கொடைகளில் மிகச் சிறந்தது என்று கூறினார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். இது குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மிக ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்ததாகவும், பல நிகழ்வுகளில் பல மணி நேரங்கள் அவர்களுடன் செலவிட்டதாகவும் கூறினார். உலகுக்கும், சமயச் சார்பற்ற உலகுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும் அன்னை தெரேசா அவர்கள் இந்தியாவின் கொடை என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மத வேறுபாடின்றி, எல்லாரும் அன்னை தெரேசாவை அன்பு கூர்கின்றனர் என்றும் தெரிவித்தார். அன்னை தெரேசா அவர்கள், கருணை வாழ்வை உண்மையிலேயே வாழ்ந்தவர்கள், அவரின் ஒவ்வொரு நாள் வாழ்வும் இரக்கத்தின் ஆண்டாக இருந்தது, அவர் புனிதராக உயர்த்தப்படுவது 21ம் நூற்றாண்டில் இரக்கத்திற்குத் தெளிவாக அழைப்பு விடுப்பதாக உள்ளது என்று கூறினார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். 2008ம் ஆண்டில் எந்த மருத்துவ சிகிச்சைகளும் பலன்தராமல் கோமா நிலையில் இறந்து கொண்டிருந்த பிரேசில் நாட்டு பொறியியலாளர் ஒருவரின் மனைவி, அருளாளர் அன்னை தெரேசாவிடம் தொடர்ந்து செபித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். 42 வயது நிரம்பிய அந்தப் பொறியியலாளர் தற்போது முழுமையாய்க் குணமடைந்து தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : AsiaNews
See More