உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

புனித நிக்கோலாஸின் எச்சங்கள் துருக்கியில் கண்டுபிடிப்பு - தொல்லியலாளர்கள்
“சாந்தா கிளாஸ்” எனப்படும் “கிறிஸ்மஸ் தாத்தா” பாரம்பரியம் தோன்றியதாக நம்பப்படும் புனித நிக்கோலாஸின் எச்சங்களை தாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்று நம்புவதாக துருக்கிய தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தெற்கு பகுதியிலுள்ள புனித நிக்கோலாஸ் பிறந்த இடத்தில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அடியில் இருந்து இந்த எச்சங்களை அவர்கள் கண்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று துருக்கியிலுள்ள மத்தியதரைக்கடல் நகரான டிமெரெயிக்கு அருகிலுள்ள அன்டாலயாவில் கிபி 4 ஆம் நூற்றாண்டு பிறந்து, அங்கேயே ஆயராக பணியாற்றியவர்தான் புனித நிக்கோலாஸ். முன்னதாக, மைரா என்று அறியப்பட்ட பகுதியில் அவர் புதைக்கப்பட்டார். ஆனால், அவருடைய எலும்புகள் திருடப்பட்டு இத்தாலியின் தெற்கிலுள்ள பாரி நகருக்கு எடுத்துசெல்லப்பட்டதாக நம்பப்பட்டது. என்றாலும், தேவாலயத்திற்கு கீழே இருந்த ஆலயம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் நம்புகின்ற பகுதியில் இருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட எலும்புகள் புனித நிக்கோலாஸின் எலும்புகளாக இருக்கலாம் என்று அன்டால்யாவின் நிவாரணம் மற்றும் நினைவுச் சின்னங்கள் நிறுவனத்தின் தலைவர் சிமில் காராபாயராம் கூறியுள்ளனர். 11 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட தோவலயத்தை பாதிக்காத அளவுக்கு அதற்கு உள்ளிருந்த ஆலயத்திற்கு செல்லும் வழியை தொல்லியல் ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர். இந்த உள்ளிருக்கும் ஆலயம் புவி-ராடார் ஆய்வக முறை மூலம் கண்டறியப்பட்டு, ஒரு பகுதியை மீட்கும் பணிகளை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
See More
வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக மீண்டும் கர்தினால் புர்கெ
வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னர், அதே பதவியில் கர்தினால் ரெய்மண்ட் லியோ புர்கெவை திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் நியமித்துள்ளார். அமெரிக்காவின் கர்தினாலான புர்கெவை வத்திக்கானின் உயரிய நீதிமன்ற பதவியில் அமர்த்தியுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று கத்தோலிக்க திருப்பீடம் அறிவித்தது. கர்தினால் அகஸ்டினோ வாலினி, கர்தினால் எடோர்டோ மினிச்சில்லி, பேராயர் பிரான்ஸ் டநீல்ஸ் மற்றும் ஆயர் ஜேஹானஸ் மரியா ஹென்றிக்சுடன் இப்போது கர்தினால் புர்கெவும் நியமிக்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுகளாக வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் பதவியை வகித்து வந்த காதினால் புர்கெவை 2014 ஆம் ஆண்டு நீக்கிவிட்டு, மால்டா சபையின் பாதுகாவலராக நியமித்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நேரத்தில் பெரிய பொறுப்பிலுள்ள ஒருவரை பதவி விலக்குவது வழக்கமாக நடைபெறுகிற வியடமல்ல. மேலும், அந்த பதவியோடு ஒப்புமைப்படுத்தி பார்க்க்க்கூடாத இன்னொரு பொறுப்பில் நியமிதததும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. கர்தினால் புர்கெ, திருத்நதையின் திருமுகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனப்பிய கர்தினால்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
See More
சாத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற காவல் தூதர்களிடம் வேண்டுங்கள் - திருத்தந்தை
காவல் தூதர்களாக மைக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் நம்மை ஊக்கமூட்டி கிறிஸ்தவ வாழ்க்கை பயணத்தில் உடனிருந்து, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார். இந்த மூன்று காவல் தூதர்களும் கடவுளுக்கு பணிபுரிவதோடு, அவருடைய மகிமையையும் தியானிக்கின்றன. வாழ்க்கை பயணத்தில் நம்முடன் இருக்கவும் கடவுள் அவர்களை அனுப்புகிறார் என்று திருத்தந்தை கூறியுள்ளார். மைக்கேல், கபிரியேல், ரபேல் காவல் தூதர்களின் பெயர் கொண்ட நாளான செப்டம்பர் 29 ஆம் தேதி டோமினுஸ் சாந்தே மார்த்தேவில் நிறைவேற்றிய காலை திருப்பலியில் மறையுரை ஆற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார். மீட்பின் பாதையில் இந்த காவல் தூதர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
See More
லாஸ் விகாஸ் படுகொலையில் பாதிக்கப்பட்டோருக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு
அமெரிக்கா இன்னொரு இரவுநேர கடும் பயங்கர தாக்குதலை சந்தித்துள்ளது. துன்புறுவோர் அனைவருக்காகவும் செபிப்பதோடு, அவர்களை பராமரிக்க வேண்டும் என்று அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர். போலீஸாரால் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 64 வயதான துப்பாக்கிதாரி ஸ்டீபன் கிரெக் படாக், இசை நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டிருந்தோர் மீது சரமாரியாக சுட்டதில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியில் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட நிலையில் 400க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான துப்பாக்கி தாக்குதலாக இது கருதப்படுகிறது. என்னுடைய சகோதர ஆயர்கள் மற்றும் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் இந்த தாக்க்குதலில் பாதிக்கப்பட்டோரையும், லாஸ் வேகாஸ் நகர மக்களையும் சென்றடைந்து உதவுங்கள் என்று அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் டேனியல் நிக்கார்டோ தெரிவித்துள்ளார். இந்நேரத்தில் துன்புறும் அனைவரையும் நாம் பராமரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். லாஸ் விகாஸில் பாதிக்கப்பட்ட அனைவருக்காவும் செபித்து, மன்றாட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்
See More
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியளித்த தன்னார்வலர்கள் மீது தாக்குதல்
மெக்ஸிகோவின் தென் பகுதியில் அமைந்துள்ள ஆஸாகா மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி கொண்டிருந்த தன்னார்வலர் இளைஞர்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ உயர் மறைமாவட்டம் தெரிவித்திருக்கிறது இந்த உதவி குழுவினர் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றிருந்த குழுவினர் மீது செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்த உயர் மறைமாவட்டத்தின் தகவல் சேவையகம் தெரிவித்திருக்கிறது. ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார், இன்னொருவர் அடிக்கப்பட்டுள்ளார். பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பாபா பிரான்சிஸ்கோ புரோ பெலிசிதாஸ் அறக்கட்டளையின் நிர்வாகி கார்லோஸ் தெரிவித்திருக்கிறார். அந்த மாநிலம்தான் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழந்த நிலநடுக்கத்தில் 8.1 என்ற அளவிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6.1 என்ற அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
See More
மத வழிபாட்டு இடங்களை பாதுகாக்க இந்திய ஆயர்கள் அழைப்பு
எல்லா சமூகத்தினரின் வழிபாட்டு இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கேட்டுகொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கத்தோலிக்க ஆலயம் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் குன்டபால்லி கிரமத்தில் இருந்த பாத்திமா அன்னை தேவாலயம் மீது மே மாதம் 21 ஆம் நாள் சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கட்நத மே மாதம் ஹைதிராபாத் உயர் மறைமாவட்ட பேராயர் தும்மா பாலா அர்சித்த புதிதாக கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் இருந்த இயேசு கிறிஸ்து, அன்னை மரியாள், சிலுவைகளை உடைத்ததோடு மர சாதனங்களை இந்த கும்பல் நாசப்படுத்தியுள்ளது. “இந்த நாட்டில் நடைபெறுபவற்றை எண்ணி கவலையடைகிறோம். நாட்டை குறைசொல்லவில்லை. தீய சந்திகள் இத்தகைய நிலைமைகளை உருவாக்குவது நாட்டிற்கு நல்லதல்ல” என்று இந்திய ஆயர்கள் பேரவையின் பொது செயலாளர் தியோடோர் மாஸ்கார்ன்ஹாஸ் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொருவரும் அடுத்தவரின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது அவசியம் பிறரது வழிபாட்டு இடங்களை சேதப்படுத்துவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
See More
பிலிப்பீன்ஸ் வன்முறை பற்றி அச்சமுறும் இந்தோனீஷிய கிறிஸ்தவர்கள்
மின்டனாவோவுக்கு அருகில் பிலிப்பீன்ஸ் ராணுவம் தீவிரவாதிகளை களையெடுக்க ஆரம்பித்துள்ளதால், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இந்தோனீஷியாவின் வடக்கிலுள்ள சுலாவிசி பகுதிக்கு வரக்கூடும் என்று அங்குள்ள கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர். பிலிப்பீன்ஸில் கடந்த வாரம் நடைபெற்ற ஜிகாதி வன்முறைகளை தொடர்ந்து, உள்ளூர் கத்தோலிக்கர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக, இந்த பகுதியின் மான்டோ மறைமாவட்ட தகவல் தொடர்புத்துறை தலைவர் அருள்தந்தை ஸ்வீன் லாலு தெரிவித்திருக்கிறார். பிலிப்பீன்ஸோடு மிகவும் நெருங்கி அமைந்திருப்பது இந்த கவலையை அதிகரித்திருக்கதாக அவர் கூறியிருக்கிறார். இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் மாராவி நகரத்தை தாக்கிய பின்னர், மின்டனோவில் அவசர நிலையை அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே அறிவித்தார். ஜிகாதிகளுக்கு எதிராக அரசப்படைகள் போரிட்டு வருவதால், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் தீவிரவாதிகள் இந்த பகுதியில் ஊடுவி வருகிறார்களா என்று கண்காணிக்க உள்ளூர் மக்களை மறைமாவட்டம் கேட்டுகொண்டுள்ளது. பாதுகாப்பு படையினருடன் திருச்சபை எப்போதும் ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
See More
இஸ்லாமியவாதிகளின் வேண்டுகோளால் அகற்றப்பட்ட நீதி தேவதை சிலை
நீதி மற்றும் நியாயத்தின் அடையாளமாக விளங்கும் கிரேக்க தேவதை தாமிஸின் சிலையை வங்த்தேச அதிகாரிகள் அகற்றியுள்ளனர். முற்போக்கு இஸ்லாமியவாதிகளை அமைதிப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற வட்டாரம் முயன்றுள்ள இந்த நடவடிக்கை லிபரல் மக்கள், சமயசார்பற்றோர் மற்றும் திருச்சபை மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமை நீதிபதி சுரேந்திர குமார் இந்த சிலையை அகற்ற ஆணையிட்டுள்ளதாகவும், அந்த வளாகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இந்த சிலை நிச்சயமாக நிறுவப்படவுள்ளதாகவும் அட்டர்னி ஜெனரல் மாக்புபே அலெம் தெரிவித்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய நாடான வங்கநேத்த்திற்கு பொருத்தமற்ற மற்றும் இஸ்லாமுக்கு புறம்பான ஒன்றாக இந்த சிலை இருப்பதாக இஸ்லாமியவாத கடும்போக்காளர்கள் தெரிவித்ததோடு, இந்த சிலை அகற்றப்படாவிட்டால் அதிக போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
See More
லண்டன் தாக்குதலில் இறந்தோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக திருத்தந்தை செபம்
பெந்தேகோஸ்ட் ஞாயிறு திருப்பிலியின் முடிவில், லண்டன் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் செபித்துள்ளார். உலகம் முழுமைக்கும் தூய ஆவி அமைதியை வழங்குவாராக. போரால் மற்றும் தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள வடுக்களை அவர் குணப்படுத்துவாராக. சனிக்கிழமை இரவு லண்டனில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதலில் பலியானோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக அனைவரும் செபிப்போமாக” என்று திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தை வழிநடத்தியதாக வத்திக்கான் வானொலி தெரிவித்திருக்கிறது. லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். வெஸ்ட் மினிஸ்டர் உயர் மறைமாவட்ட பேராயரும், இங்கிலாந்து ஆயர்கள் பேரவையின் தலைவருமான கர்தினால் வின்சென்ட் நிக்கோலாஸூம் இந்த தாக்குதலில் இறந்தோருக்க்காக செபித்துள்ளார்.
See More
உறைவிட பள்ளிகளுக்காக திருத்தந்தையிடம் மன்னிப்பு கேட்ட கனடா தலைமையமைச்சர்
உண்மையான ஒப்புரவு ஏற்பட்டு முன்னேற்றம் காண கனடா நாட்டவருக்கு உதவ வேண்டும் என்று அந்நாட்டு தலைமையமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ திருத்தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பழற்குடியின மக்களின் சமூகங்களை சிதைத்ததற்கு, கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் மன்னிப்பு கேட்ட பின்னர், ட்ரூடோ இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். திருத்தந்தையோடு வத்திக்கானில் 36 நிமிடம் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர், செயதாயளர்களிடம் பேசிய ட்ரூடோ, இந்த தகவலை வெளியிட்டார். சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதற்கே என்னுடைய வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை திருத்தந்தை உணர்ந்து கொள்ள செய்ததாக, ஜஸ்டின் ட்ரூடோ செய்தாயளர்களிடம் தெரிவித்திருக்கிறார். பழங்குடியின மக்களை உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி கற்க செய்து அவர்களை சமூகத்திலிருந்து பிரித்து கேடுற செய்வதற்கு கத்தோலிக்க திருச்சபையின் ட்ரூடோ திருத்தந்தையிடம் மன்னிப்பு கோரியதாக தெரிய வருகிறது.
See More