உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

மேற்கு சீனாவில் ஓய்வு பெற்ற ஆயர் மரணம்

சீனாவின் மேற்கு பகுதியில் ஓய்வுபெற்ற ஆயர் ஒருவர், தன்னுடைய 98வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். எப்ரல் 20 ஆம் நாள் குய்ட்சொளவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆயர் அனைஸ்டியுஸ் வாங் சொங்யின் மறைவால் அப்பகுதி கத்தோலிக்கர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இறப்புக்கு முன்னர் ஒரு மாத காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக, இந்த ஆயரின் சொந்த ஊரான ஹூயாங்குவோஷூ தேவாலயத்தின் பங்கு தந்தை பீட்டர் வாங் அறிவித்திருக்கிறார். அந்த ஆயரின் கடைசி உயிர்ப்பு பெருவிழா மருத்துவமனையில் கழிந்தது என்று அருள்தந்தை வாங் குறிப்பிட்டுள்ளார்.