உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

கெய்ரோவில் தெருவில் நடந்த கத்திகுத்து தாக்குதலில் காப்டிக் அருட்தந்தை கொலை

எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலுள்ள ஒரு ஏழை மாவட்டத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் அருட்தந்தை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்திய கேப்டிக் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை தெரிவித்திருக்கிறது. இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டுள்ள மிகவும் சமீபத்திய தாக்குதல் இதுவாகும். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதலில் கெல்லப்பட்டவர் அருட்தந்தை சமான் ஷெகாடாவாகும். ஒருவர் இந்த அருட்தந்தையின் தலை மீது கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். ஆனால், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்த திருச்சபை தெரிவித்திருக்கிறது. ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கக்கூடாது என்பதால், பெயரை தெரிவிக்க விரும்பாமல் அதிகாரிகள் இது பற்றி தகவல்கள் வழங்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் பற்றி தெரியவில்லை. எகிப்தின் மேல் பகுதி பிரதேசத்தை சேர்ந்த அருட்தந்தையான ஷெகாடா, தன்னுடைய பங்கிலுள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு குடும்பத்தினரிடம் இருந்து உதவிகளை பெற்று கொண்டு திரும்பி கொண்டிருந்தார். தன்னுடைய அலைபேசியை அங்குள்ள ஒரு கோவிலில் விட்டுவிட்டதால். அதனை எடுக்க திரும்பி சென்றபோது, இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று பிரிட்னின் காப்டிக் ஆர்த்தோடாக்ஸ் ஆயர் ஆங்கெலோஸ் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தனக்கு மிகந்த கோபத்தை வரவழைத்துள்ளதாகவும், இந்த கோபத்திற்காக தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் இந்த ஆயர் தெரிவித்திருக்கிறார்.