உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

சித்ரவதை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக சிவப்பு நிறத்தில் ரோம் கோலோசியம்

உலக அளவில் சிதரவதை செய்யப்படுகின்ற கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வகையில், ரோமிலுள்ள கோலோசியம் சிவப்பு விளக்கில், ரத்தத்தின் அடையாளமாக இந்த மாதத்தின் கடைசியில் தோன்றயிருக்கிறது. திருப்பபையில் தேவையில் உழல்வோருக்கும் உதவி அளிக்கும் அமைப்பின் நிதி ஆதரவு பெற்று பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை ரோம் கோலோசியம் சிவப்பு விளக்கால் ஜெலிக்கும். சிரியா மற்றும் இராக்கிலுள்ள பிரபல முக்கிய தேவாலயங்களும் இவ்வாறு சிவப்பு வண்ணத்தில் தோன்றும். இந்த நிகழ்வு இரண்டு முக்கிய அடையாள நபர்களை வெளிப்படுத்தும். ஒன்று, சமீபத்தில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானி கிறிஸ்தவர். இரண்டு, நைஜீரிய இஸ்லாமியவாத குழுவான போகோ ஹராமால் கடத்தப்பட்டு, கொடுமைக்கள்ளாக்கப்பட்ட தாய் ரபேக்கா. மேலும் உலக அளவில் இறைநம்பிக்கைகளுக்காக துன்பப்படும் அனைவரும் நினைவுகூரப்படுவர்.