உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

மனித கடத்தலை பொறுத்துக்கொள்ளும் வழிகளை மக்கள் சோதனை செய்ய வேண்டும் - திருத்தந்தை

மனித கடத்தலை பொறுத்துக்கொள்ளும் வழிகளை மக்கள் புரிந்து சோதனை செய்ய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். சமூகங்களும், நாடுகளும் பொறுத்து கொண்டு மனித கடத்தலை குறிப்பாக விபச்சாரத்தை குறிப்பிடுகையில் அவற்றை ஊக்குவிக்கின்றன என்பதை யாரும் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். முன்னர் எண்ணியதைவிட நவீன அடிமைத்தனம் பரவலாகியுள்ளது. இந்தப் பாகுபாடும். இழிவும் மிகவும் செழிப்பான சமூகங்களிலும் காணப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார். சட்டம் இயேற்றுவோர் மற்றும் திருச்சபை பணியாளர்கள் வீற்றிருந்த கூட்டத்தில் பேசுகையில் திருத்தந்தை இதனை தெரிவித்திருகிறார். காயீன்! உனது சகோதரர் எங்கே என்று இறைவன் கேட்பது விவிலியத்தில் உள்ளது. இந்த கேள்வி சமூகம் சகித்து கொண்டு ஊக்கமூட்டுகிற குறிப்பாக பாலியல் வாத்தகத்தால் எழுகின்ற பல்வேறு வகையான சிக்கல்களை தீவிரமாக பரிசீலனை செய்து நம்மை சவாலுக்கு உட்ப்படுத்துகின்றது என்று சாந்தா மரியா குழுவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். சாந்தா மரியா குழு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்களின் பேரவையால் நடத்தப்படும் மனித கடத்தலை தடுக்கின்ற குழுவாகும்.