உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

இணையம் மூலம் உரிமை மீறப்படும் குழந்தைகளை பாதுகாக்க நாம் அதிகம் செயல்பட வேண்டும் - திருத்தந்தை

பாலியில் உரிமை மீறல்களில் சிக்குகின்ற குழந்தைகளை பாதுகாக்க கத்தோலிக்க திருச்சபை அடிக்கடி தவறியுள்ளதை ஏற்றுகொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இணையதளம் உள்பட குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மாண்புக்காகவும் தொலைநோக்குடன் தொடர்சியாக பணிபுரிய வேண்டுமென என உறுதிமொழி அறிவித்துள்ளார். குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில், தன்னுடைய தோல்வியையே சமீப காலமாக திருச்சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மிகவும் முக்கிய கரணிகள் வெளிவந்துள்ளன. இதற்கு கடவுள், பாதிக்கப்பட்டவர், பொது கருத்தின் முன்னிலையிலுள்ள நம்முடைய பொறுப்புணர்வை எற்றுக்கொள்வது அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். எண்ணியல் உலகில் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கு வத்திக்கானில் இருந்து பங்கேற்பதை திருத்தந்தை பிரான்சிஸ் வரவேற்றுள்ளார். இந்த மாநாடு, நம்பிக்கை சமூகங்களை பெறுவது, போலீஸ், மென்பொருள் மற்றும் சமூக ஊடக தொழில்துறைகள், வெகுஜன ஊடகங்கள், லாபகரமற்ற மற்றும் அரசு நிறுவனங்கள் இளையேரை மேம்ப்பட்ட முறையில் பாதுகாப்பதற்கான நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சார்பில் இந்த மாநாட்டின் முடிவுகளை 16 வயதான அயர்லாந்தை சேர்ந்த முய்ரியான் ஒ“கார்ரோல் பார்வையாளர்களுக்கு முன்னால் சமர்பித்த்தார்.