உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

வரலாற்றில் மிக மோசமான சித்ரவதையை அனுபவிக்கும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சித்ரவதைகளை அனுபவித்து வருகிறார்கள், ஆனால், ஐக்கிய நாடுகள் மாமன்றமும், பன்னாட்டு சமூகமும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது. திருச்சபையின் தேவையில் உழல்வோருக்கு கத்தோலிக்க சேரிட்டி உதவி அமைப்பின் பிரிட்டன் அலுவலகத்தால் நடத்தப்பட்ட“சித்ரவதையாகும் மற்றும் மறக்கப்பட்டவர்கள்?” என்ற ஆய்வு இதனை வெளிப்படுத்தியுள்ளது. 2015 முதல், 2017 வரையான காலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் புதிய உயர் நிலையை அடைந்திருக்கிறது என்றும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மற்றும் போக்கோ ஹராம் அமைப்பினர் தங்களின் தாக்குதலை விரைவாக அதிகரித்த்தன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு பன்னாட்டு சமூகம் சரியான பதிலளிக்க தவறிவிட்டதாக இந்த ஆய்வு குற்றஞ்சாட்டியுள்ளது. இராக் மற்றும் சிரியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும்போது, அவசர கால உதவியை கூட வழங்குவது போன்றவற்றை உதவிகளை இந்நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் மாமன்றமும், அரசுகளும் வழங்க தவறிவிட்டன என்று இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவ நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் இந்த இடைவெளியை நிரப்பியிருக்காவிட்டால். இராக்கிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே மறைந்திருக்கும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.