உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

கேரளா திருச்சபையின் இறைபணி மையமாக விளங்கும் சிறிய சமூகங்கள்

அடிப்படை கிறிஸ்தவ சமூகங்கள்‘ திருச்சபை மேற்கொள்ளும் இன்றைய இறைபணியின் மையமாகவும், ஒரு திருச்சபையின் புதிய வழியாகவும் உள்ளது என்று கேரளாவின் லத்தீன் ஆயர்களின் பேரவை ஏற்பாடு செய்த இறைபணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வராபுலி உயர் மறைமாவட்டத்தில் வல்லார்பாடாமிலுள்ள புனித மரியன்னை கருவூல சன்னிநிதியில் அக்டோபர் 6 முதல் 8 வரை இந்த மாநாடு நடைபெற்றது. கேரளாவின் எல்லா லத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டங்களில் இருந்தும் அருட்தந்தையர், துறவறத்தார், பொதுநிலையினர் என 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு திருப்பலியை பேராயர் புரேடாசெ ருகாம்ப்வா நிறைவேற்றினார். இன்றைய இந்திய சமூகச்சூழலில் இறைபணி பற்றி இந்த பிரதிநிதிகள் விவாதித்தனர். கேரளாவிலுள்ள லத்தீன் திருச்சபையின் பத்தாண்டு மேய்ப்புப் பணித்திட்டம் இந்த மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது