உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

திருச்சபை செய்தி விவரங்கள்

NEXT

இனப்படுகொலைக்கு எதிராக கேமரூன் ஆயர்கள் எச்சரிக்கை

கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் அதிகரித்து வருகின்ற இன படுகொலையை தடுப்பதற்கு உடனடியாக செயல்பட அந்நாட்டு ஆயர்கள் அரசுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். பெருமளவு பிரெஞ்சு மொழி பேசுவோர் வாழும் இந்த நாட்டில், அங்லோபோன் பகுதி பேராட்டக்காரர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக அதிக எண்ணிக்கையில் கூடி போராடிய பின்னர் இந்த இன படுகொலை நடப்பதாக ஆயர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் அரசால் தூண்டிவிடப்பட்ட பல்வேறு வடிவிலான வன்முறைகளும், கொடுமைகளும் நாட்டின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் நடைபெறுவதாக ஆயர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி தெரிவித்தனர். அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள், கொள்ளைகள், தீ வைப்பு ஆகியவற்றையும், கொடூரம், சித்ரவதை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் பிரிவுகளால் நடைமுறையாகும் நியாயப்படுத்தப்படாத போர் போன்ற நிலைமைகளை ஆயர்கள் கண்டித்துள்ளனர். இணைய பயன்பாட்டை துண்டித்துள்ள அரசாலும் இந்த வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது. 20 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமைதியான தீர்வை காண பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் உயர் ஆணையாளர் அழைப்புவிடுத்துள்ளார்.